كلمات Neeradum Kangalodu
இறையோனின் வழிமீது நடக்கலாமா நாம்
நபிநாதர் நல்வார்த்தை ஏற்கலாமா
பொல்லாத சைத்தானை விரட்டலாமா
நல்லோர்கள் செயல்நாமே செய்யலாமா
முத்துநபி நாயகத்தை கண்ணில் கொள்ளுவோமா..
முக்திதரும் சலவாத்தை நாமுரைப்போமா
ஹக்கனவன் அருளையெல்லாம் அள்ளி எடுப்போமா
நாளையந்த சுவனத்திலே நுழைந்திடுவோமா..
(இறையோனின்....)
பள்ளிசென்று தொழுகைதனை தொழுதிடுவோமா
நெஞ்சிருக்கும் அழுக்குகளை கழுவிடுவோமா..
வஞ்சமொழி உரைப்பதையே நிறுத்திடுவோமா
வள்ளல்குணம் நாமெடுத்து வழங்கிடுவோமா .....
(இறையோனின்...)
நோன்புகளை குறைகளின்றி நோற்றிடுவோமா
வீம்புகளை ஒழித்துவிட்டு
சிறந்திருப்போமா.
ஹஜ்ஜுதனை செய்வதற்கு போய்வருவோமா
பாவங்களைத் தொலைத்துவிட்டு
பலம்பெறுவோமா..
(இறையோனின்...)